Thursday, June 3, 2010

சொர்க்கம் கண்டவனடா


வயல் வெளி பார்த்து வரட்டி தட்டி

ஓணான் பிடித்து ஓடையில் குளித்து 
 
 
எப்படியோ படித்த நான்
 
ஏறி வந்தேன் நகரத்திற்கு! சிறு அறையில்
 
குறிகி படுத்து 
 
 
சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட
 
வேலையோடு வாழ்கிறேன் 
 
 
கணிபொறியோடு! சிறியதாய் தூங்கி
 
கனவு தொலைத்து காலை
 
உணவு மறந்து 
 
 
 
நெரிசலில் சிக்கி கடமை அழைக்க
 
காற்றோடு செல்கிறேன் காசு பார்க்க...
 
மனசு 
 
தொட்டு வாழும்
 
வாழ்க்கை மாறிப்போகுமோ மௌசு
 
 தொட்டு வாழும் வாழ்க்கை 
 
 
பழகிபோகுமோ... வால் பேப்பர்
 
மாற்றியே
 
வாழ்க்கை தொலைந்துபோகுமோ 
 
 
சொந்தபந்த உறவுகளெல்லாம் ஜிப்
 
 பைலாய் சுரிங்கிபோகுமோ... தாய்
 
மடியில் 
 
 
தலைவைத்து நிலவு முகம் நான் ரசித்து
 
கதைகள் பேசி கவலைகள் மறந்த 

 
 
காலம் இனிதான் வருமா...
 
 
 
இதயம் நனைத்த இந்த வாழ்வு இளைய
 
தலைமுறைக்காவது இனி 
 
 
கிடைக்குமா? சொந்த
 
 மண்ணில் சொந்தங்களோடு சோறு
 
தின்பவன் யாரடா
 
 
இருந்தால் அவனே சொர்க்கம்
 
 கண்டவனடா

Tuesday, June 1, 2010

Fancy dress ..